யார் அழைப்பது பாடல் வரிகள்

Yaar Azhaippadhu Lyrics 

படம்      : மாரா

பாடல்   : யார் அழைப்பது

பாடல் எழுதியவர் : தாமரை

பாடல் பாடியவர்   : சிட் ஸ்ரீராம்


யார் அழைப்பது
யார் அழைப்பது
யார் குரலிது

காதருகினில்
காதருகினில்
ஏன் ஒலிக்குது

போ என அதை
தான் துரத்திட
வாய் மறுக்குது!

குரலின் விரலை
பிடித்து தொடர
தான் துடிக்குது...

உடலின் நரம்புகள்
ஊஞ்சல் கயிறு
ஆகும் ஆராரோ...

உயிரை பரவசம்
ஆக்கி இசைக்கும்
ஆரிரோ ராரோ...

மழை விடாது வர
அடாது தொட தேகம் நனையும்
மனம் உலாவி வர
அலாதி இடம்
தேடும்....

யார் அழைப்பது 
யார் அழைப்பது
யார் குரலிது

குரலின் விரலை பிடித்து தொடர
தான் துடிக்குது..

கதவே தாள் திரவாயோ...

சேரும் வரை போகும் இடம்
தெரியாதெனில்...

போதை தரும் பேரின்பம் வேருள்ளாதா

பாதி வரை கேட்கும் கதை
முடியாதெனில்...

மீதி கதை தேடாமல் யார் சொல்ல்லுவார்

அலைவார் அவரெல்லாம் தொலைவார்...
வசனம் தவறு..


அலைவார் அவர்தானே அடைவார்...
அவர் அடையும் புதையல் பெரிது

அடங்காத நாடோடி
காற்றல்லவா...

யார் அழைப்பது, யார் அழைப்பது 
யார் குரலிது

காதருகினில்
காதருகினில்
ஏன் ஒலிக்குது

போ என அதை
தான் துரத்திட
வாய் மறுக்குது!

குரலின் விரலை
பிடித்து தொடர
தான் துடிக்குது...

பயணம் நிகழ்கிற
பாதை முழுதும் மேடையா மாறும்..
எவரும் அறிமுகம் இல்லை எனினும்
நாடகம் ஓடும்..

விடை இல்லாத பல
வினாவும் எழ தேடல் தொடங்கும்..

விலை இலாத ஒரு வினோத சுகம் தோன்றும்......

யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரலிது
விரலின் குரலை பிடித்து தொடர தான் துடிக்குது...