என்ன சொல்ல போகிறாய் பாடல் வரிகள்

enna solla pogirai lyrics

படம்      : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

பாடல்   : என்ன சொல்ல போகிறாய்

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

பாடல் எழுதியவர் : வைரமுத்து

பாடல் பாடியவர்   : சங்கர் மகாதேவன்



இல்லை இல்லை சொல்ல

ஒருகனம் போதும் 

இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்...


என்ன சொல்ல போகிறாய்...


சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் ஞாயமா...?ஞாயமா...?

காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன

மெளனமா...?.... மெளனமா...?


அன்பே எந்தன் காதல் சொல்ல 

நொடி ஒன்று போதுமே...?

அதை நானும் மெய்பிக்க தானே 

ஒரு ஆயுள் வேண்டுமே....


இல்லை இல்லை சொல்ல ஒரு கனம் போதும்

இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்...


என்ன சொல்ல போகிறாய்...

என்ன சொல்ல போகிறாய்..


சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் ஞாயமா...? ஞாயமா...?


காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன

மெளனமா...?  மெளனமா...?


அன்பே எந்தன் காதல் சொல்ல 

நொடி ஒன்று போதுமே...?

அதை நானும் மெய்பிக்க தானே 

ஒரு ஆயுள் வேண்டுமே....


இல்லை இல்லை சொல்ல ஒரு கனம் போதும்

இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்...


என்ன சொல்ல போகிறாய்...

என்ன சொல்ல போகிறாய்..


இதயம் ஒரு கண்ணாடி

உனது பின்பம் விழுந்ததடி

இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி


கண்ணாடி பின்பம் கட்ட

கயிறொன்றும் இல்லையடி...

கண்ணாடி ஊஞ்சல் பின்பம்  ஆடுதடி...


நீ ஒன்று சொல்லடி கண்ணே

இல்லை நின்று கொல்லடி கண்ணே...

எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்

என்னை துரத்தாதே.... உயிர் கரையேறாதே...


இல்லை இல்லை சொல்ல

ஒருகனம் போதும் 

இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்...

என்ன சொல்ல போகிறாய்...

என்ன சொல்ல போகிறாய்...


சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் ஞாயமா...?ஞாயமா...?

காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன

மெளனமா...?.... மெளனமா...?



விடியல் வந்த பின்னாலும் 

விடியாத இரவு எது..?

பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி...


இவ்வுலகம் இருண்ட பின்னும்

இருளாத பாகம் எது..?

கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி...


பல உலக அழகிகள் கூடி 

உன் பாதம் கழுவலாம் வாடி...

என் தளிர்மலரே இன்னும் தயக்கமென்ன

என்ன புரியாதா இது வாழ்வா.... சாவா....?


என்ன சொல்ல போகிறாய்.....

என்ன சொல்ல போகிறாய்....

.என்ன சொல்ல போகிறாய்.....

என்ன சொல்ல போகிறாய்.....

ஞாயமா..... ஞாயமா....

என்ன சொல்ல போகிறாய்.....

என்ன சொல்ல போகிறாய்.....

மெளனமா...... மெளனமா........

என்ன சொல்ல போகிறாய்.....